The number one community resource for Tamil Speaking families in Michigan.Tamil Sangam, Michigan is a non-profit organization, with no religious or political alignment. The core objective is - "Preserve and Nurture the Tamil language, culture and arts in Michigan, in a unique social atmosphere".
Click here to register for the Tamil Maalai 2012 program, free for members!!!!!!!!!!!
தமிழ் மாலை நிகழ்ச்சியில் கலந்துக்க , இங்கே தட்டுங்கள் !!!!!!!!!!!
[மு.வ உரை மற்றும் சாலமன் பாப்பையா உரை]
அன்புள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்களே, வணக்கம்!!
மார்ச் மாதம் 10 ஆம் நாள்,சனிக்கிழமை அன்று மதியம் 1.30 முதல் 4.30வரை ட்ராய் சமுகக் கூடத்தில்,3179 , Livernois ,Troy, MI 48083 நமது சங்கம் "தமிழ் மாலை" என்கிற ஒரு சிறப்பு தமிழ் இலக்கிய நிகழ்ச்சியை நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் நடக்கும் திருக்குறள் உரைக்கும் போட்டி மற்றும், மாறுவேட பேச்சுப் போட்டியும் நடைபெறும்.
தமிழ் மாலை நிகழ்ச்சி - விதிகளும் விதிமுறைகளும்:
1. தமிழ் மாலையில் பங்கேற்கும் அனைவரும் 2012 மிச்சிகன் தமிழ் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும். 2. தமிழ் மாலையில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள் கண்டிப்பாக முன் பதிவு செய்ய வேண்டும். முன் பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 04(ஞாயிற்றுக்கிழமை), 2012 .
3. தமிழ் மாலை அன்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய முடியாது. 4. முன் பதிவு செய்ய, நமது சங்கத்தின் www.mitamilsangam.org என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்யவும். முன்பதிவு செய்ய கடைசி நாள் நீட்டிக்க படமாட்டாது. 5. தமிழ் மாலையில் பங்கேற்க விரும்புபவர் மிச்சிகன் தமிழ் சங்கத்தின் 2012 உறுப்பினர் இல்லையென்றால் சங்கத்தின் இணையதளத்தில் (www.mitamilsangam.org) இருந்து உறுப்பினர் படிவத்தை பயன்படுத்தி உறுப்பினர் ஆக வேண்டும்.
போட்டிகளின் விதிமுறைகள் கீழ்வருமாறு:
திருக்குறள் போட்டி: 1. நான்கு வயதும் அதற்க்கு குறைந்த வயதும் உள்ள குழந்தைகள் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும். விளக்கம் தேவையில்லை. 2. ஐந்து வயது முதல் எட்டு வயதுள்ள குழந்தைகள் இரண்டு திருக்குறள் சொல்ல வேண்டும். விளக்கம் தேவையில்லை. 3. ஒன்பது வயது முதல் பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகள் இரண்டு திருக்குறள் சொல்ல வேண்டும். அதில் நடுவர் கேட்கும் ஒரு குறளுக்கு தமிழில் விளக்கம் சொல்ல வேண்டும். 4. பதிமூன்று வயதும் அதற்கும் அதிக வயது உள்ள குழந்தைகள் மூன்று திருக்குறள் சொல்ல வேண்டும். அதில் நடுவர் கேட்கும் இரண்டு குறள்களுக்கு தமிழில் விளக்கம் சொல்ல வேண்டும். 5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
மாறுவேட பேச்சு போட்டி: 1. பேச்சு தமிழில் மட்டும் இருக்க வேண்டும். 2. பேசுபவர்கள் அவர்கள் போட்டிருக்கும் மாறுவேடத்திற்கு பொருத்தமான தலைப்பில் மட்டும் தான் பேசவேண்டும் . உதாரணம் : பாரதியார் வேடமிட்டால் பாரதியார் தொடர்புடைய கவிதையோ , வசனங்களோ கூறலாம்! 3. ஒன்பது வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகள்: இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை பேசலாம். 4. பதிமூன்று வயதும் அதற்கும் அதிக வயது உள்ள குழந்தைகள்: மூன்று முதல் நான்கு நிமிடம் வரை பேசலாம். 5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
தமிழ் சொல்வதெழுதுதல்( தமிழ் ஸ்பெல்லிங் பீ ) 1.கேட்கப்படும் தமிழ் வார்த்தையை சரியாக எழுதவேண்டும். 2 .இப்போட்டிக்கு முன்பதிவு செய்த குழந்தைகளுக்கு, போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய வார்த்தைகளின் தொகுப்பு வழங்கப்படும். 3. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
முன்பதிவு செய்யும் பொழுது கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும் பங்கேற்பாளரின் பெயர் மிச்சிகன் தமிழ் சங்கம் உறுப்பினரின் பெயர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் பெயர் : திருக்குறள்/ மாறுவேட பேச்சுப்போட்டி/ தமிழ் சொல்வதெழுதுதல்( தமிழ் ஸ்பெல்லிங் பீ ) பங்கேற்பாளர் பிறந்த தேதி (குழந்தைகளுடையது மட்டும்)
அனுப்ப வேண்டிய முகவரி:
அர்ச்சனா பிரதீப்
உங்கள் குழந்தைகளை இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கவும். மற்றும் பதிவு விண்ணப்பங்களை கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை , மார்ச் 04, 2012 க்குள் தவறாமல் அனுப்பவும்.
நன்றியுடன் 2012 செயற்குழு உறுப்பினர்கள்
தமிழ் சொல்வதெழுதுதல்( தமிழ் ஸ்பெல்லிங் பீ )
For Ages 5-8
20 words
- பாடம்
- கண்கள்
- கரும்பு
- பொங்கல்
- சூரியன்
- தட்டு
- பட்டம்
- மாதம்
- பருப்பு
- உண்மை
- திருநாள்
- தர்மம்
- நண்பன்
- நன்று
- அருமை
- காற்று
- பறவை
- தாவரம்
- விலங்கு
- பெற்றோர்
For Ages 9-12
20 words
- திருக்குறள்
- விளக்கம்
- எழுத்துக்கள்
- மலர்கள்
- உணவுக்கூடம்
- முக்கோணம்
- வாழைப்பழம்
- உறுப்புகள்
- புகைவண்டி
- உறவுகள்
- பலகாரம்
- கதிரவன்
- குற்றாலம்
- மனப்பாடம்
- விளையாட்டு
- பட்டிமன்றம்
- கையெழுத்து
- வெங்காயம்
- புத்தகம்
- பம்பரம்
For Ages 13 –above
15 lines
- நான்அழகாய் வரைவேன்
- எனக்கு மாம்பழம் பிடிக்கும்
- சூரியன் கிழக்கே உதிக்கும்
- மனித நேயம் போற்றுங்கள்
- ஒன்றாய்க் கூடி வாழ்வோம்
- எங்கள் அம்மா இனியவள்
- தினமும் தமிழ் பேசுவோம்
- கெடுவான் கேடு நினைப்பான்
- நான் நன்றாகப் படிப்பேன்
- பாட்டி கதை சொல்லுவார்
- அப்பா அன்பு காட்டுவார்
- பசுவின் நிறம் வெள்ளை
- ஏரியில் மீன்கள் உள்ளன
- அறம் செய்ய விரும்பு
- இந்தியா வளரும் நாடு
Michigan Tamil Sangam's Summer Picnic
on June 9th ,2012 at
Stony Creek Metro Park
4300 Main Park Road, Shelby Township, MI 48316
Click here for the park map
Membership benefits:
1. Loyalty card for 2012 new Members and Renewals.
[Note: Please see the list of vendors providing 5 to 10% discount at
"Membership->Loyalty Card" ]
2. Discounted event tickets.
3 .Discounted Tamil class fees.
4. Social Events like Picnic and others.
5. Kadhambam Tamil magazine mailed quarterly.
Follow us on
To advertise on Tamil Sangam Michigan Website
please contact :
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Reach out to the Tamil community faster. Below are the rates.
- $25 per email newsletter blast which goes to tamil sangam members frequently
Terms and conditions for advertisements on the website.
- Advertisement content has to be approved by Tamil Sangam Executive Committee.
- Advertisement pricing subject to change
- Please send your banner advertisements (jpg or gif format) in 200 x 90 pixels
Counter Stats

|
|