வணக்கம். மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பெருமை மிகுந்த காலாண்டு இதழ் கதம்பம் இதோ உங்களுக்காக.
கதம்பம் – இந்தப் பதிப்பை, பெண்மையினைக் கொண்டாடும் இதழாகவும் மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை வரவேற்கும் இதழாகத் தொகுத்துள்ளோம்.இந்தப் பதிப்பில் ஒளவையாரின் நன்முத்துக்களாம் நற்சிந்தனைகளையும் பதித்துள்ளோம்.
வாசகர் பக்கம்‘ என்னும் பகுதியில் பல வாசகர்கள் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்த பகுதி, பல வாசகர்களை புதிய எழுத்தாளர்களாகவும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த இதழில் மிச்சிகன் தமிழ் மக்களின் கவிதைகள்,கதைகள்,
கட்டுரைகள்,அனுபவங்கள்,சமையல் குறிப்புகள் ,துணுக்குகள், நற்சிந்தனைகள் உள்ளன. மேலும், நம் தமிழ்ப் பள்ளி மாணவ,மாணவிகளின் சிறப்பான கட்டுரைகளும் அணி வகுத்துள்ளன.