தலைவர் உரை

வணக்கம் !

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று  இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். நம் சங்கத்தின் நீண்டகாலப் பாரம்பரியத்தையும், அதன் உன்னத நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு பெரும் வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன்.

மிச்சிகனில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற இணக்கத்தோடும், சகோதரத்துவத்தோடும் இணைந்து பயணிப்போம்.

வள்ளுவப் பெருந்தகையின்

"அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு"

குறள் சொல்லும் கூற்றுப்படி ஒரு வலுவான சமூகத்தை உருவாக்க முயற்சிப்போம்.நம்முடைய இந்த புதிய பயணத்தில், சமூக மேம்பாடு, இளைய தலைமுறையினருக்கான ஆக்கப்பூர்வமான வழிநடத்துதல் மற்றும் அறப்பணிகளிலும் நம் சங்கம் தடம் பதிக்கும்.

நம் சங்கத்தின் வளர்ச்சி என்பது தனி ஒரு மனிதனின் உழைப்பால் சாத்தியமாவது அல்ல; அது உங்கள் ஒவ்வொருவரின் பேராதரவாலும், பங்களிப்பாலும் மட்டுமே முழுமை பெறும். தூய்மையான எண்ணத்தோடும், தமிழ் மீதான மாறாப் பற்றோடும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நம் இலக்குகளை எளிதாக அடையலாம். புதிய திட்டங்களையும், புதுமையான சிந்தனைகளையும் கொண்டு நம் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

புதிய செயற்குழுவினரோடு இணைந்து, உங்கள் அனைவரின் ஆலோசனைகளையும் பேராதரவையும் நாடி நிற்கிறேன். வாருங்கள், ஒன்றிணைந்து நம் தமிழ் அடையாளத்தைக் கொண்டாடுவோம்!

நன்றி.

அன்புடன், 
விஜய் சுப்ரமணியன்

Leave a reply