இன்றே உறுப்பினராக பதிவு செய்ய வாரீர்!!!


கதம்பம் இதழ்


அன்புள்ள தமிழ் வாசகப் பெருமக்களுக்கு,

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பெருமை மிகுந்த காலாண்டு

இதழான நமது கதம்பம் இதோ உங்களின் மேலான

வாசிப்பிற்காக!


தலைவர் உரை


அன்புநிறை மிச்சிகன் தமிழ் உறவுகளுக்கு எனது முதற்கண் வணக்கம்!

ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக தமிழன்னைக்கும் மற்றும் அவ்வன்னையின் மகவுகளான உங்கள் அனைவருக்கும் சேவையாற்ற என்னையும் மற்றும் எங்கள் செயற்குழுவையும் தேர்வு செய்தமைக்காக எனது நன்றியையும் அன்பையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

47 ஆண்டுகளாக உறுப்பினர்களாலும், தன்னார்வலர்களாலும், விளம்பரதாரர்களாலும், செயற்குழுக்களாலும் மற்றும் தலைவர்களாலும் தொடர்ந்து தழைத்துக் கொண்டிருக்கும் நம் சங்கத்தை மேலும் மெருகேற்ற நாம் அனைவரும் தொடர்ந்து உழைப்போம்.

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் 
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே 
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த 
ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்’ என்ற பாரதியாரின் கூற்றுப் படி எல்லோரும் நமது சங்கத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம்!

இதுகாரும் சிறப்பாக உழைத்து ஒற்றுமையைப் பேணியது போலவே தொடர்ந்து நமது தமிழ்ச் சங்கம் பீடு நடை போட உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடுகிறேன்.

தாயகத்தில் உறவுகளை விடுத்து நாற்றாக அந்நிய தேசத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நாம் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் அன்பு பாரட்டி, உறவாடி மகிழ, இளைப்பாற மற்றும் நம்மை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்து செல்ல நமது தமிழ்ச் சங்கம் வெண்கொற்றக் குடையாக உள்ளது.

நமது சங்கம் வாயிலாக பல சிறப்பான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததே. இந்த முறை எங்கள் செயற்குழு ‘சமூகத்துடனான ஒருங்கிணைவு’ என்ற எண்ணத்துடன் பல நிலைகளில் உள்ளூர் முதல் உலகளாவிய அளவில் பல்வேறு தரப்பட்ட மக்களுடன் கலை, இலக்கியம், கல்வி, உடல் நலம், மன நலம், தொழில் முனைவு, திறன் வளர்ப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் என பல துறைகளில் செயல்பட எண்ணியிருக்கிறோம். உங்கள் ஆதரவை நல்குங்கள்!

‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’என்ற குறளின் வழி துணிந்து செல்வோம்! தொடர்ந்து வெல்வோம்!

கரம் கோர்ப்போம்! வளம் சேர்ப்போம்! வாழ்க தமிழ்! வளர்க மிக்சிகன் தமிழ் சங்கம்!

என்றும் அன்புடன்

முனைவர்

சுரேஷ் செல்வராஜ் பழனியாண்டி

தலைவர், 2022-2024 செயற்குழு

TAMIL SCHOOL

MTS Tamil school 2023-24

Michigan Tamil Sangam organizes Tamil classes for younger kids starting from age 3. Started this program in 2010 to teach Tamil to our kids. Our Tamil class has been very successful in the past years and more than 600 kids participated last academic year. To know more about Tamil School, click here...Miindia.com is the source of information for the Michigan Indian community. The web portal lists all events, organizations, businesses and provides interactive features like free ads and message board sections. Community news and articles are also published. Visit www.miindia.com to connect with our community network.