Christmas Celebration 2024

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே, பொன்விழா செயற்குழுவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நம்முடைய தமிழ்ச் சொந்தங்களுடன் வெற்றிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம்.இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஃபார்மிங்டன் முதியோர் இல்லத்தில் உள்ள மூத்தவர்களுடன் கூடி கொண்டாடும் வாய்ப்பாக நமக்கு அமைந்தது.Brookdale Farmington hills முதியோர் இல்லத்தில்,ஞாயிற்றுக்கிழமை மாலை 3.0 மணிக்கு தமிழ் மக்கள் ஒன்று கூடினார்கள். கொண்டாட்டத்தின் சிறப்பு MTS தலைவரின் உரையுடன் தொடங்கியது.மகிழ்ச்சி, கருணை மற்றும் நம்பிக்கையால் களை கட்டிய இந்த நிகழ்வு நெஞ்சங்களை நெகிழச் செய்தது.இனிய பாட்டுகள், […]

Ponvizha Deepavali 2024

தொன்று தொட்டு தொடரும் நம் பாரம்பரிய தீபாவளி கொண்டாட்டம் இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த 50-ம் ஆண்டு பொன் விழா தீபாவளி கொண்டாட்டம்அக்டோபர் 20-ம் தேதி Fitzgerald மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக ஆரம்பித்தது. நம் தமிழ் உறவுகளை அன்போடு வரவேற்க பன்னீர்,சந்தனம்,பூ முதலியவற்றோடு அன்பளிப்பும் (Goodie bag) கொடுக்கப்பட்டது. பூக்கள், வண்ண விளக்குகள், வெடி போன்ற தீபாவளியை நினைவு கூறும் அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட புகைப்பட சாவடியில் ஆர்வமாக மக்கள் குடும்பத்துடன் புகைப்படம் […]

Mayilsamy Annadurai

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா செயற்குழு சார்பில் நடைபெற்ற மற்றுமோர் முக்கிய நிகழ்ச்சி அய்யா மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடனான கலந்துரையாடல். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக பணயாற்றினார். இவரது தலைமையில் கீழ் சந்திராயன் 1, மங்கள்யான் போன்ற திட்டங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டது. வேறு அலுவல் காரணமாக அமெரிக்கா வந்த அவரை, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் திருமதி. […]

Tamil School

மிசிகன் தமிழ்க் கல்விக் கூடம் என்னைப் பற்றிய உள்ளடக்கம் வழங்குகிறது, அது தமிழ் மொழியில் மிசிகன் மாநிலத்தில் தமிழ் மொழி, கலை, மற்றும் கலாச்சாரம் பற்றிய அனைத்து கருத்துகளையும் போல உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூடம் மிசிகன் மாநிலத்தில் தமிழ் மொழியை பயிற்சி செய்கின்றன, கலையும் பண்பாடும் சார்ந்த பாடங்களைக் கற்றுக் கொள்கின்றன, தமிழ் இலக்கியத்தின் மேன்மையை அறிந்து கொள்கின்றன, மற்றும் தமிழ் சங்கங்கள், வரலாறு மற்றும் பண்பாடுகளை முதலில் வழங்குகின்றன. மிசிகன் தமிழ்க் கல்விக் கூடம் […]

President(2024-2026)

தலைவர் உரை

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே,“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்” – திருக்குறள் 462தேர்ந்து தெளிந்த நிர்வாகச் சுற்றத்தோடு தான் செய்யவிருக்கும் செயலை ஆராய்ந்து செய்பவருக்குமுடியாத செயல் என்று எதுவும் இல்லை என்கிறது வள்ளுவம் . ஆம், நம் தாய்த்தமிழ் நாட்டிலிருந்துகடல் கடந்து புலம்பெயர்ந்த நம் முன்னோடிகளால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மொழி காக்கும்கருவிகளாம் கலை, பண்பாடு மற்றும் இலக்கியத்தை வளர்த்தெடுக்கத் தோற்றுவிக்கப்பட்டதுதான்நம்முடைய மிச்சிகன் தமிழ்ச் சங்கம். அன்றைக்கு நன்மக்களால் நல்லெண்ணத்தில்உருவாக்கப்பட்ட நமது சங்கம் இன்றைக்கு […]

MTS – Summer picnic 2024

பொன்விழா செயற்குழுவின் முதல் நிகழ்வாக கோடை விழாவை நம்முடைய தமிழ் சொந்தங்களுடன் வெற்றிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். மேம்பரி பூங்காவில்(Maybury Park) மக்கள் காலை 11:30 மணி அளவில் திடலுக்கு வர ஆரம்பித்தார்கள. நண்பகல் வேளையில், மக்கள்திரளில் திடல் திக்குமுக்காடியது என்றால் மிகையல்ல.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வித்தியாசமான உணவுகளை சமைத்து கொண்டு வந்தனர்.பல்வேறு வகையான உணவுகள், அதில் புலவ், சாம்பார், கறி, வடை, பஜ்ஜி, பிரியாணி,பீட்சா, பாஸ்தா, தயிர் சாதம் மற்றும் பல இனிப்புகள் இருந்தன. ஒவ்வொரு உணவிலும் […]

கதம்பம் இதழ்

https://www.mitamilsangam.org/?page_id=9647அன்புள்ள தமிழ் வாசகர் பெருமக்களுக்கு, வணக்கம். மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பெருமை மிகுந்த காலாண்டு இதழ் கதம்பம் இதோ உங்களுக்காக. கதம்பம் – இந்தப் பதிப்பை, பெண்மையினைக் கொண்டாடும் இதழாகவும் மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை வரவேற்கும் இதழாகத் தொகுத்துள்ளோம்.இந்தப் பதிப்பில் ஒளவையாரின் நன்முத்துக்களாம் நற்சிந்தனைகளையும் பதித்துள்ளோம். வாசகர் பக்கம்‘ என்னும் பகுதியில் பல வாசகர்கள் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்த பகுதி, பல வாசகர்களை புதிய எழுத்தாளர்களாகவும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இதழில் மிச்சிகன் தமிழ் […]