தமிழர் வாழ்வியல் உணவு, உடை மற்றும் உறைவிடம் சார்ந்தது மட்டுமல்ல கலைகளை தன்னகத்தே கொண்டது. உடையின்றி திரிந்த ஆதிகாலத்தில் கூட தமிழன் ஆடல்,பாடல் கலைகளின்றி தன் வாழ்வியல் இல்லை.
பழங்குடி பாடல்கள்,நடனங்கள் காலப்போக்கில் மாற்றம் பெற்று கலாச்சார பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், நவீன பாடல்கள் என்றும் குழு நடனங்கள், பரதம் போன்ற கலாசார நடனங்கள், தற்போது நவீன குழு உற்சாக நடனங்கள் என்றும் மாற்றம் பெற்றிருக்கின்றன.இப்பாடல்கள், நடனங்கள் அனைத்தும் கலை நிகழ்ச்சிகளாக தமிழர்கள் வாழ்வில் இன்றைக்கும் இரண்டறக் கலந்து நிற்கின்றன.
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக தமிழன்னைக்கும் மற்றும் அவ்வன்னையின் மகவுகளான உங்கள் அனைவருக்கும் சேவையாற்ற….