தமிழர்கள் நம் மொழியை பேசியும், எழுதியும், விவாதித்தும் வளர்த்தெடுத்தார்கள் என்றால் மிகையல்ல.அரசவையில் புலவர்கள் பாடியும், கலைஞர்கள் நாடகங்களில் நடித்தும், எதிர் விவாதம் செய்தும் வளர்த்தெடுத்தார்கள் என்பதற்கு சான்று “பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்” என்று மணிமேகலையில் குறிப்பிட்டுள்ளதே சான்று.
பட்டிமன்றமோ, விவாத அரங்கமோ இல்லாமல் பொன்விழா மேடையில் நிகழ்ச்சிகள் நிறைவு பெறாது.எனவே புகழ்பெற்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் அவர்களின் தலைமையில் விவாத அரங்கத்தை நடத்த மிச்சிகன் தமிழ்ச் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக தமிழன்னைக்கும் மற்றும் அவ்வன்னையின் மகவுகளான உங்கள் அனைவருக்கும் சேவையாற்ற….