குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியந்து பார்க்கும், ஆச்சர்யமூட்டும், சிந்தனையை தூண்டும் நிகழ்ச்சி என்றால் அது மாயக்கலை நிகழ்ச்சி.எப்படி, ஏன், எதனால் என்று பார்ப்பவர்களின் மனதில் கேள்வியை எழுப்பி விடை காண முடியாமல் ஆச்சர்யமூட்டும் கலை.
பொன்விழா மேடையில் பார்வையாளர்களின் கண்களை மயக்கி மனதினை ஈர்க்கும் மாயக்கலை நிகழ்ச்சியை நடத்த மிச்சிகன் தமிழ்ச் சங்கம் திட்டமிட்டிருக்கிறது
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக தமிழன்னைக்கும் மற்றும் அவ்வன்னையின் மகவுகளான உங்கள் அனைவருக்கும் சேவையாற்ற….