மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா செயற்குழு சார்பில் நடைபெற்ற மற்றுமோர் முக்கிய நிகழ்ச்சி அய்யா மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடனான கலந்துரையாடல். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக பணயாற்றினார். இவரது தலைமையில் கீழ் சந்திராயன் 1, மங்கள்யான் போன்ற திட்டங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டது. வேறு அலுவல் காரணமாக அமெரிக்கா வந்த அவரை, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் திருமதி. ராஜகுமாரி தொகுத்து வழங்கினார். மற்றொரு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் திருமதி. கிரிகுஜலாம்பால் வரவேற்புரை வழங்க , செயற்குழு தலைவர் திரு. திருமலைஞானம் தலைமை உரையாற்றினார். அடுத்து திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தனது துவக்க உரையை பேசி முடித்தவுடன் கேள்வி, பதில் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. இந்த நிகழ்ச்சிக்கு முன்பே மக்களிடம் கேள்விகள் பெறப்பட்டு அதை கதம்பம் ஆசிரியர் திரு.கிருஷ்ணன், பொருளாளர் திரு. அருண், இணை செயலாளர் திருமதி. மிருணாளினி, இணைய ஒருங்கிணைப்பாளர்கள் திரு.விக்னேஷ் மற்றும் திருமதி. பிரியா உள்ளிட்டோர் கேட்க, திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பாக பதிலளித்தார். இந்த நிகழ்வு அனைவருக்கும் மனதிருப்தியை அளித்தது.