Ponvizha Deepavali 2024

தொன்று தொட்டு தொடரும் நம் பாரம்பரிய தீபாவளி கொண்டாட்டம் இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த 50-ம் ஆண்டு பொன் விழா தீபாவளி கொண்டாட்டம்
அக்டோபர் 20-ம் தேதி Fitzgerald மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக ஆரம்பித்தது.

நம் தமிழ் உறவுகளை அன்போடு வரவேற்க பன்னீர்,சந்தனம்,பூ முதலியவற்றோடு அன்பளிப்பும் (Goodie bag) கொடுக்கப்பட்டது. பூக்கள், வண்ண விளக்குகள், வெடி போன்ற தீபாவளியை நினைவு கூறும் அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட புகைப்பட சாவடியில் ஆர்வமாக மக்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பெரியவர்கள் குத்து விளக்கு ஏற்ற, குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடி இனிதே துவக்கி வைத்தனர். விழாவில் நடனம், நாடகம் மற்றும் பாட்டு போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்பு சொந்தங்களின் பசி ஆற்ற அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

பொன்விழா ஆண்டின் முத்தாய்ப்பாக தமிழ் சங்கம் ஆரம்பித்த வருடம் முதல் இன்று வரை சிறப்பாக நடத்தி சென்ற குழு உறுப்பினர்களின் புகைப்பட காணொளி அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பூரிப்பையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போன ஆண்டு செயற்குழு உறுப்பினர்களுக்கு நினைவுக் கோப்பை வழங்கி கெளவுரவிக்கபட்டது. நம் தமிழ் சங்கத்தின் இன்னொரு அங்கமான தமிழ்ப் பள்ளியின் தன்னாலர்வலர்கள் அனைவரும் மேடையேற்றி கெளரவிக்கப்பட்டாளர்கள்.

கொலு அலங்கார போட்டி வெற்றியாளர்கள், தமிழ் தேனீ வெற்றியாளர்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. அதிர்ஷ்ட குலுக்களில் தேர்வான நம் தமிழ் சொந்தகளுக்கு விளம்பரதாரர்கள் பல்வேறு பரிசினை அளித்தனர்.
உணவு, உடை, நகை போன்ற பல்வேறு அங்காடிகள், விளம்பரதாரர்கள் கூடம் என்று அரங்கம் வெளியிலும் மக்கள் உற்சாகமாக பொழுதுபோக்கினார்கள்.

பொன்விழா தீபாவளியின் முக்கிய பகுதியாக சன் தொலைக்காட்சியின் சிறப்பு கல்யாணமாலை நிகழ்ச்சி பிரபலங்கள் திரு.மோகன், திருமதி. மீரா நாகராஜன், புலவர்.ராமலிங்கம், முனைவர்.பர்வீன் சுல்தானா, திரு.சுஜித் குமார், திருமதி. கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்பு விருந்தனராக அரங்கத்தை அலங்கரித்தனர்.
அவர்களின் பேச்சு மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது. அந்த நீண்ட மாலை வேளையிலும் மக்கள் அரங்கம் முழுவதும் அமர்ந்து நிகழ்ச்சியை மனதார கண்டுகளித்தனர்.

Leave a reply