Christmas Celebration 2024

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே,

பொன்விழா செயற்குழுவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நம்முடைய தமிழ்ச் சொந்தங்களுடன் வெற்றிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம்.இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஃபார்மிங்டன் முதியோர் இல்லத்தில் உள்ள மூத்தவர்களுடன் கூடி கொண்டாடும் வாய்ப்பாக நமக்கு அமைந்தது.Brookdale Farmington hills முதியோர் இல்லத்தில்,ஞாயிற்றுக்கிழமை மாலை 3.0 மணிக்கு தமிழ் மக்கள் ஒன்று கூடினார்கள்.

கொண்டாட்டத்தின் சிறப்பு MTS தலைவரின் உரையுடன் தொடங்கியது.மகிழ்ச்சி, கருணை மற்றும் நம்பிக்கையால் களை கட்டிய இந்த நிகழ்வு நெஞ்சங்களை நெகிழச் செய்தது.இனிய பாட்டுகள், மற்றும் சில விளையாட்டுகளுடன் முழு நிகழ்ச்சியும் மகிழ்ச்சியில் மிதந்தது.முதியோர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மற்றும் இரவு உணவாக பிஸ்ஸா(pizza) வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் மேலும் ஒரு முக்கிய தருணம், மூத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கிய விடயமாகும். அவர்கள் பரிசுகளைத் திறந்தபோது முகங்களில் தெரிந்த மகிழ்ச்சி எங்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நமது அன்பால் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பரிசும் அவர்களுக்கு மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும் மறக்க முடியாத ஞாபகத்தால் நிறைந்த தருணங்களை வழங்கியது.

முதியோர் இல்லத்தில் கழித்த ஒவ்வொரு தருணமும், நம்முடைய சமூகத்தில் மூத்தவர்கள் முக்கியமானவர்கள் என்பதை நினைவூட்டியது. அவர்களிடம் அன்பையும், கனிவையும் பரிமாறிய இந்த அனுபவம் என்பது சுய மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதை உணர்த்தியது.

இந்த மகிழ்ச்சியான தருணங்களை எங்களுடன் பகிர்ந்த முதியோர்களுக்கும், இந்த அனுபவத்தை மறக்க முடியாத ஒன்றாக்கிய அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் நன்றி. கிறிஸ்துமஸ் ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறுவதற்கான ஒரு நிகழ்வு என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்தது.

Leave a reply