வணக்கம் ! மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். நம் சங்கத்தின் நீண்டகாலப் பாரம்பரியத்தையும், அதன் உன்னத நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு பெரும் வாய்ப்பாகவே இதனைக் கருதுகிறேன். மிச்சிகனில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற இணக்கத்தோடும், சகோதரத்துவத்தோடும் இணைந்து பயணிப்போம். வள்ளுவப் பெருந்தகையின் “அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு” குறள் சொல்லும் கூற்றுப்படி ஒரு வலுவான சமூகத்தை உருவாக்க […]